Headlines

குடிநீர் குழாய் உடைப்பு : காவல் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

குடிநீர் குழாய் உடைப்பு : காவல் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் பாலாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பல்லாவரம் காவல் நிலையம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த குழாய் உடைப்பு, சீரமைக்கப்படாததால், பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பல்லாவரம் காவல் நிலையத்திற்குள் பொதுமக்கள் மற்றும் போலீசார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், பொதுமக்களின் சிரமத்தைப் போக்கவும், உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *