Headlines

ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்து : தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்.

ஆம்னி பேருந்தின் பின்னால் கார் மோதிய விபத்து : தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்.

ராமாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்
கார்த்தி (38), சென்னையில் வேலைபார்த்து வரும் இவர் தனது சகோதரர் திருமணதிற்காக சென்னையிலிருந்து தனது மனைவி சூர்யா மற்றும் தன்னுடன் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கும் தனது கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் முதுகுளத்தூருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை மனைவி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இவர்களது கார் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின் பகுதியில், அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓரிவயிலை சேர்ந்த காஜா (எ) காளீஸ்வரன், ராசிகுளத்தை சேர்ந்த பிரபாகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த பெரம்பலூர் நகர போலிசார் விபத்தில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாய மடைந்த கார்த்தி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

மேலும்
கார்த்தியின் மனைவி சூர்யா கார் ஓட்டுனர் கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பலத்த காயமடைந்த கார்த்தியின் மனைவி சூர்யா மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததார்.

தொடர்ந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் நகர போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுனரான தூத்துக்குடியை சேர்ந்த ராஜசீலன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *