Headlines

TCD Newsroom

கோவையில் கொள்ளையடித்த கும்பல் : உளுந்தூர்பேட்டையில் மடக்கி பிடித்த போலீசார்

கோவையில் கொள்ளையடித்த கும்பல் : உளுந்தூர்பேட்டையில் மடக்கி பிடித்த போலீசார்

கோவை மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளுடன் காரில் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் கோயம்புத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக…

Read More
அமைச்சர்களும் தொண்டர் மனநிலையில் உள்ளனர் : திருமாவளவன்

அமைச்சர்களும் தொண்டர் மனநிலையில் உள்ளனர் : திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை. என்னதான் அமைச்சர்களாக இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கத்தான் செய்யும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான சூழல் கனிந்திருப்பதை அமைச்சர் வன்னியரசு உறுதி செய்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி…

Read More
நேபாளம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த மூதாட்டி 11 நாட்களுக்கு பின் மீட்பு

நேபாளம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த மூதாட்டி 11 நாட்களுக்கு பின் மீட்பு

நேபாளத்தில் சேறும்,சகதியுமான கட்டிட இடிபாடுகளில் 11 நாட்களாக சிக்கி தவித்த மூதாட்டி மீட்கப்பட்டார். பனிப்பாறை உடைப்பால் கடந்த ஆகஸ்ட் 26ல்திபெத்தின் லெண்டே நதியில் உருவான வெள்ளம், போடே கோசி நதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியது. ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் திரசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. இதனால் நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 1344 பேர் உயிரிழந்தனர்….

Read More
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை - கே.என். நேரு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை – கே.என். நேரு

இந்த சோதனை உறுதியாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். என் வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவது வழக்கம் தான் என லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி தில்லைநகரில் உள்ள முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.திருச்சி, சென்னை…

Read More
மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தாய் : போலீசார் விசாரணை

மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தாய் : போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம் பகுதியில் மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை தாய் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் (36) கூலி வேலை செய்து வருகிறார்.கணவர் இன்றி தனியாக வசிக்கும் இவருக்கு ஒரு மகனும் 18-வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு,உத்திரம்பட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் முத்தீஸ்வரர் தெருவில் வாடகை வீட்டிற்கு தனது மகன் மற்றும் மகளுடன் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் ஒச்சேரி அடுத்த…

Read More
சிமெண்ட் ஆலையால் காற்று மாசு : பொதுமக்கள் போராட்டம்

சிமெண்ட் ஆலையால் காற்று மாசு : பொதுமக்கள் போராட்டம்

கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை கண்டித்து மதுக்கரை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பாலக்காடு சாலை மதுக்கரை பகுதியில் பிரபல சிமெண்ட் நிறுவனமான ஏசிசி சிமெண்ட் நிறுவன ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தை அதானி குழுமத்தினர் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் அப்பகுதியில் பெருமளவில் காற்று மாசு அடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு…

Read More
போலீசார் மீது நடவடிக்கை எடுங்க : கமிஷ்னர் அலுவலகத்தில் பெண் புகார்

போலீசார் மீது நடவடிக்கை எடுங்க : கமிஷ்னர் அலுவலகத்தில் பெண் புகார்

ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவரின் நிலைமை குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மனு கொடுத்தனர். இதில் இதில் ஈ.பி. காலனி காந்திநகர் பகுதியில் திண்டுக்கல் அம்மன் மெஸ் என்ற ஹோட்டலை குணசீலா என்பவர் நடத்தி வருகிறார். குணசீலாவின் கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் கடந்த 17…

Read More
பாஜகவிற்கு என் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை : தேர்தல் ஆணைய தடை குறித்து அசன் மௌலானா கருத்து

பாஜகவிற்கு என் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை : தேர்தல் ஆணைய தடை குறித்து அசன் மௌலானா கருத்து

பாஜகவிற்கு என் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை, அதனால்தான் தேர்தல் ஆணையம் மூலமாக மூன்று ஆண்டுகளுக்கு நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது செலவு செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி…

Read More
மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1கோடி லஞ்சம் : வனச்சரகர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்

மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1கோடி லஞ்சம் : வனச்சரகர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்

ஜவ்வாது மலையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலத்தை தனி நபருக்கு பட்டா செய்து தருவதாக கூறி மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்ற 3 வனச்சரக அலுவலர்கள் உட்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஜவ்வாதுமலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில்…

Read More
வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

தென்காசி தலை துண்டித்து வாலிபர் வெட்டி கடையம் அருகே வாலிபர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் சந்தான பாலமுருகன் (28), கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு பொட்டல் புதூர் தீபத் திடல் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள்…

Read More