Headlines

TCD Newsroom

சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில்மதுபானபெட்டிகளை குடோனில் இருந்து லோடுவண்டிமூலம் டாஸ்மாக்கடைகளில் இறக்குவதற்குரூபாய் 15 ஐ வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மாநில வாணிபக்கழகம்அலுவலகம் முன்பு சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானபெட்டிகளை குடோனில் இருந்து லோடுவண்டிமூலம் டாஸ்மாக்கடைகளில் இறக்குவதற்குரூபாய் 15 ஐ வழங்கிடவேண்டும் ,ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000…

Read More
குடிபோதையில் வாகனங்களை வழிமறித்து வாலிபர் ரகளை : அடித்து கீழே தள்ளிய ஓட்டுநர்

குடிபோதையில் வாகனங்களை வழிமறித்து வாலிபர் ரகளை : அடித்து கீழே தள்ளிய ஓட்டுநர்

ஆற்காடு ரத்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை வாகன ஓட்டுநர் ஒருவர் அடித்து கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் ஒருவர் வாகனங்களை மறைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் மருத்துவமனைக்கு செல்வோர் அவசர தேவைக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம்…

Read More
சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர்களை அறிவித்த திமுக

சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர்களை அறிவித்த திமுக

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள்…

Read More
விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகள் தயாரிப்பு

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகள் தயாரிப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோளிங்கர் கால்நடை மருத்துவமனை அருகே காகிதக் கூழ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 2 அடி முதல் 8 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம்…

Read More
தாமிரபரணி ஆற்றங்கரையில் தீப்பற்றி எரிந்த மரங்கள் : போலீசார் விசாரணை

தாமிரபரணி ஆற்றங்கரையில் தீப்பற்றி எரிந்த மரங்கள் : போலீசார் விசாரணை

​நெல்லை மாநகர பகுதிக்குட்பட்ட கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமான பனை மரங்கள் உட்பட பல்வகை மரங்கள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் எதிர்பாராதவிதமாக திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாகத் தீ அடுத்தடுத்து வேகமாகப் பரவி, அங்குள்ள பனை மரங்களில் பிடித்து எரியத் தொடங்கியது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டது​இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகப் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் விரைந்து…

Read More
மருத்துவமனைக்கு செல்வதை தடுத்த முதலாளி : தாயும் குழந்தையும் உயிரிழப்பு

மருத்துவமனைக்கு செல்வதை தடுத்த முதலாளி : தாயும் குழந்தையும் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்த இருளர் சமூகப் பெண் தேன்மொழி, தனது கணவர் ஆனந்தனுடன் அரக்கோணம் சாலையில் விறகு வியாபாரி ஆறுமுகத்தின் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றிருந்த நிலையில், 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வேலை இடத்தை விட்டு செல்லக்கூடாது என வியாபாரி தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், தார்ப்பாய்…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல்: ‘தேர்தல் மன்னன்’ ஆஜர்

தாராபுரம் இடைத்தேர்தல்: ‘தேர்தல் மன்னன்’ ஆஜர்

தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதல் நபராக ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 17-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப்…

Read More
மாணவி பாலியல் வன்கொடுமை : பள்ளி விடுதி துய்மைபணியாளர், கள்ளக்காதலனுக்கு குண்டாஸ்

மாணவி பாலியல் வன்கொடுமை : பள்ளி விடுதி துய்மைபணியாளர், கள்ளக்காதலனுக்கு குண்டாஸ்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மகளிர் விடுதி மாணவியை மது அருந்த வைத்து வெளி நபர்களால் பாலியல் தொல்லை கொடுத்ததாக தூய்மை பணியாளர் மற்றும் அவரது கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரசு மகளிர் விடுதியில் பள்ளி மாணவியரை மது அருந்த வைத்து வெளி நபர்களால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி புகார் எழுந்த நிலையில், விடுதி தூய்மை பணியாளர்…

Read More
பள்ளி பேருந்து - லாரி மோதல் : 15 மாணவர்கள் காயம்

பள்ளி பேருந்து – லாரி மோதல் : 15 மாணவர்கள் காயம்

கரூர் அருகே தரகம்பட்டியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதியில் எஸ் கே வி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடவூர், பாலவிடுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட…

Read More
குப்பைகளில் உணவு தேடிய கரடி : அச்சத்தில் குன்னூர் மக்கள்

குப்பைகளில் உணவு தேடிய கரடி : அச்சத்தில் குன்னூர் மக்கள்

குன்னூர்  அருவங்காடு பகுதியில் உணவு தேடி கரடி வந்தது சிசிடிவியில் பதிவான நிலையில், கரடி நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னூரில் குடியிருப்புகள் அதிகம்  நிறைந்த அருவங்காடு பகுதியில் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டருந்த குப்பை மூட்டைகளை கலைத்து உணவு தேடும் கரடியின் வீடியோ அங்கு பொருத்தப் பட்டிருந்த Cctv கேமராவில் பதிவிவாகி தற்போது  இந்த வீடியோ வைரலானதால்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பான…

Read More