Headlines

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகள் தயாரிப்பு

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகள் தயாரிப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோளிங்கர் கால்நடை மருத்துவமனை அருகே காகிதக் கூழ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 2 அடி முதல் 8 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் மூஷிக வாகனம், நந்தி வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், பல்வேறு அலங்காரங்களுடனும் சிலைகள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சிலைகளின் அளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2 அடி உயர சிலைகள் ரூ.2,500 முதல், 8 அடி உயர சிலைகள் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

.விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால், சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *