Headlines

TCD Newsroom

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி : விசில் ஊதி விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி : விசில் ஊதி விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று 4-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தமிழக அரசு உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து…

Read More
லாரி மீது உரசிய மின்சார கம்பி : மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

லாரி மீது உரசிய மின்சார கம்பி : மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் சுதா என்பவருக்கு சொந்தமான வி.எஸ்.எல். ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.தொழிற்சாலையில் பூங்குளம், புதூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு (52) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரியில் இருந்து மணலை இறக்குவதற்காக…

Read More
ஒரே இரவில் 6 மாடுகள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஒரே இரவில் 6 மாடுகள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கீழ் சோமார்பேட் பகுதி மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் உள்ள சில குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். பகலில் கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் இரவில் சோமார்பேட் பகுதி மற்றும் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை மாடுகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது இரண்டு இடங்களிலும் மாடுகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. வினோத், மாலா,…

Read More
தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு : மகன் தற்கொலை முயற்சி

தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு : மகன் தற்கொலை முயற்சி

பேர்ணாம்பட்டில் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை க்கு முயன்றார்.தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பத்திரமாக அவரை மீட்டனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, பக்கீரான் வீதியைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவர், பேர்ணாம்பட்டு நகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அரங்கநாதனின் இறப்புச் சான்றிதழை கேட்டு அவரது மனைவி பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், சுமார் இரண்டு…

Read More
சிவகங்கை இரட்டைக் கொலை: 2-வது நாளாக சாலை மறியல் – மருத்துவமனை வாகனம் மீது தாக்குதலால் பதற்றம்

சிவகங்கை இரட்டைக் கொலை: 2-வது நாளாக சாலை மறியல் – மருத்துவமனை வாகனம் மீது தாக்குதலால் பதற்றம்

சிவகங்கை அருகே பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், கொலைக்கான காரணத்தை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உறவினர்கள்…

Read More
கோவை : சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

கோவை : சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை!

கோவை, ரயில் நிலையத்தின் பின்புறமுள்ள குட்செட் சாலை சாக்கடை கால்வாயில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலைப் பகுதியில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள சாக்கடை கால்வாயில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read More
ராம்சார் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : குப்பை மேடான குளக்கரை

ராம்சார் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : குப்பை மேடான குளக்கரை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராம்சார் குறியீடு பெற்ற குளத்தின் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு மற்றும் குப்பைகள். துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதி அடைந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலச்சங்கரங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பனூர் பகுதியில், ராம்சார் குறியீடு பெற்ற குளம் அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில், மர்ம…

Read More
சொத்து வரியை மீண்டும் உயர்த்தக்கூடாது : அன்புமணி ராமதாஸ்

சொத்து வரியை மீண்டும் உயர்த்தக்கூடாது : அன்புமணி ராமதாஸ்

நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும் உயர்த்தக் கூடாது, மாநில நிதிஆணைய பரிந்துரையை ஏற்க கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்துவரி…

Read More
தாளவாடி அருகே குடிநீர் வழங்ககோரி பெண்கள் சாலை மறியல் :போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே குடிநீர் வழங்ககோரி பெண்கள் சாலை மறியல் :போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரியபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதி யில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை . இதனால் குடிநீர் இல்லாமல் அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தோட்டங்களிலும் தண்ணீர் குறைவாக இருந்ததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக மழை நீரை சேமித்து அருந்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும்…

Read More
மாணவன் மரணம் : சிபிசிஐடி விசாரணவ கோரி போராட்டம் - போலீசார் மீண்டும் பலப்பிரயோகம்

மாணவன் மரணம் : சிபிசிஐடி விசாரணவ கோரி போராட்டம் – போலீசார் மீண்டும் பலப்பிரயோகம்

மதுரை ஆணையூர் மாணவன் தமிழ்ச்செல்வன் மர்ம மரணத்திற்கு சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரை ஆணையூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆணவப் படுகொலையா? அல்லது விபத்தா? என்பதை கண்டறியாமல் குற்றவாளிகளுக்கு மதுரை மாநகர காவல்துறை துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன்….

Read More