Headlines

TCD Newsroom

திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை ரத்து : தென்னக ரயில்வே

திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை ரத்து : தென்னக ரயில்வே

திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட பயணிகள் ரயில் சேவைகள் இன்று முதல் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10.00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56004) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56003) ஆகிய இரு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன….

Read More
விபத்தில் உயிரிழந்த இளைஞர் : கண்டுகொள்ளாமல் சென்ற பொதுமக்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

விபத்தில் உயிரிழந்த இளைஞர் : கண்டுகொள்ளாமல் சென்ற பொதுமக்கள் – அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கட்டுப்படி பகுதியில் உள்ள இருதய மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆதிலால் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மகன் ஆசிப் 18 வயது இவர் கடந்த 12 தேதி மாலை ஆரணி – வேலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். கணியம்பாடியில் உள்ள பாரதி நகர் பகுதியில் வந்தபோது முன்னாள் சென்ற வாகனம் மெதுவாக சென்றுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தின் பிரேக் பிடித்ததில், நிலைத்தடுமாறி வலது புறம் கீழே…

Read More
கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் பெற வந்த பெண்களிடம் ரூ.500 கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் சங்க ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முனைவென்றி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கறவை மாடு மற்றும் விவசாயக் கடன்களைப் பெறுவதற்காக கூட்டுறவு சங்கத்தை அணுகியுள்ளனர். அப்போது, கடன் நடைமுறைக்காக தனியாக ரூ.500 செலுத்த…

Read More
பெரியப்பா வீட்டில் நகை,பணம் திருட்டு : தம்பி மகன் கைது

பெரியப்பா வீட்டில் நகை,பணம் திருட்டு : தம்பி மகன் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் தமிழ்செல்வன் (21) என்பவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வனின் பெரியப்பா தேவராஜ் (68), கடந்த 17-ம் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த தமிழ்செல்வன் பெரியப்பா வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து, அதில் இருந்த கால் பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.4,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக…

Read More
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு – விஜயவாடாவில்துயர சம்பவம்

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு – விஜயவாடாவில்துயர சம்பவம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடா சிட்டிநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, கொதிக்கும் சாம்பார் நிரப்பப்பட்ட அண்டாவை கீழே இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுஜாதா…

Read More
இத்தாலிய பள்ளிகளில் புர்காவிற்கு விரைவில் தடை : பிரதமர் ஜார்ஜியா மெலோனி

இத்தாலிய பள்ளிகளில் புர்காவிற்கு விரைவில் தடை : பிரதமர் ஜார்ஜியா மெலோனி

இத்தாலியில் உள்ள பள்ளிகளில் புர்காவை தடை செய்யவும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் விரைவில் சட்டம் இயற்றப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். ரோமில் நடந்த ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டத்தில் பேசிய மொலோனி,“எங்களைப் பொறுத்தவரை, இத்தாலிக்கு வந்து இங்கு தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் எவரும் எங்கள் மொழியைக் கற்க வேண்டும், எங்கள் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் எங்கள் விதிகளை மதிக்க வேண்டும்,” பள்ளிச்சூழலுடன் ஒன்றிணைவதில்…

Read More
அமைச்சர் நிகழ்ச்சியில் மின்வெட்டு : ஃபியூஸ் கேரியர் பழுது என எம்.எல்.ஏ விளக்கம்

அமைச்சர் நிகழ்ச்சியில் மின்வெட்டு : ஃபியூஸ் கேரியர் பழுது என எம்.எல்.ஏ விளக்கம்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது‌. தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் உள்ளக குழுவின் பயிற்சியை தொடங்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் தனது உரையை தொடங்கினார். உரை தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே அரங்கில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அமைச்சர் எவ்வித தடங்கலுமின்றி தனது பேச்சை தொடர்ந்து பேசினார். ஆனால் மின்வெட்டால் அமைச்சர் பேசியது…

Read More
“பெண்களை பிற்போக்குத்தனமாக பார்க்கும் மனநிலை மாற வேண்டும்!” : தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

“பெண்களை பிற்போக்குத்தனமாக பார்க்கும் மனநிலை மாற வேண்டும்!” : தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன்.என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஆனால், அவர் சில நாட்கள்…

Read More
ரயில் அடிபட்டு இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மீட்பு : போலீசார் நடவடிக்கை

ரயில் அடிபட்டு இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மீட்பு : போலீசார் நடவடிக்கை

தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயரிழந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய நினைத்த நிலையில், ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த இரசுலாபாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நந்தீஸ்வரன் (27). விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் குடும்பத்தினரிடம் விநாயகர் சிலை அருகே படுத்து உறங்குவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காட்பாடி ரயில்…

Read More
நாகை, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலத்தையடுத்து நாகை,காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில்…

Read More