அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் குவாகம் சாலையில் இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இறந்து கிடப்பதாக குவாகம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த புள்ளி மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் உயிரிழந்த புள்ளி மான் பிரேத பரிசோதனை செய்யும் வகையில் அரியலூர் கால்நடை மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து புள்ளிமான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இறந்ததா அல்லது சமூக விரோதிகள் புள்ளி மானை வேட்டையாட முயற்சித்ததால் இறந்ததா என்பது குறித்து வனத்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
