சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே ரூபன் என்ற இளைஞர் வாட்டர் பாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளார்
அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த நாகராஜ் என்கின்ற பாம்பு நாகராஜ் மற்றும் தேவராஜ் ஆகிய இருவரும் ரூபனிடம் வீண் தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் தேவராஜ் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரூபனின் கைகளிலும் தலைப்பகுதியிலும் வெட்டி உள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற திருவெற்றியூர் போலீசார் தப்பி ஓடிய இருவரையும் துரத்தி சென்று பிடித்தனர் அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
