Headlines

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, கிளி, வஸ்திரம், மங்கள பொருட்கள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் மடத்தில் ஆண்டாள் தாயார் சூடிக்கொடுத்த பூ மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யானைகள் அணிவகுக்க, நாதஸ்வர இசையுடன் நான்கு மாட வீதிகளில், உற்சவ குடையுடன் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாலை இன்று காலை மூலவர் மற்றும் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *