கூடலூர் சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்ட பகுதியில் கூண்டில் சிக்கியது
ஆட்கொல்லி புலிதான்
என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லாரிஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி மற்றும் ஆகஸ்ட் 21ஆம் தேதி இரண்டு
தோட்ட தொழிலாளர்களை புலி தாக்கி கொன்ற நிலையில்,ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் புலியைப் பிடிக்க தனிக்குழு அமைத்து 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, 13 இடங்களில் கூண்டு அமைத்து, இரண்டு கும்கி யானைகளை உதவிகளுடன் 200க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தனித்தனி குழுக்களாக, கால்நடை மருத்துவ குழு உதவியுடன் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் 28 நாட்களாக வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
இந்நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் தேயிலை எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று காலை புலி ஒன்று பிடிபட்டுள்ளது.
புலியின் ஆக்ரோசமாக உறுமியதை தொடர்ந்து உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய புலி ஆக்ரோஷத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் பொதுமக்களை யாரும் வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து கூண்டில் சிக்கிய புலி ஆட்கொல்லி புலியா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இரண்டு பேரை தாக்கிக் கொண்ட ஆட்கொல்லி புலி என தெரிய வந்ததை தொடர்ந்து அதனை வனத்துறையினர் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கூடலூர் ஓவேலி லாரிஸ்டன் குடியிருப்பு பகுதியில் இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லி புலிக்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் தற்போது ஒரு புலி சிக்கி உள்ளதாகவும், புலி ஆக்ரோஷமாக காணப்படுவதாகவும், இரண்டு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியா என ஆய்வு மேற்கொண்ட நிலையில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலி என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 28 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
