அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. கடந்த மாதத்தில் பெய்த மழையை நம்பி அரியலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவும் மழையும் இல்லாததால் முளைவிட்ட பயிர்கள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கவலைகளை தீர்க்கும் வகையில்
நேற்று மாலை
அரியலூர் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் கருகிய நிலையில் உள்ள மானாவாரி பயிர்களுக்கு உயிர் கொடுத்து உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
