Headlines

சோளிங்கர் : பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

சோளிங்கர் : பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா சோளிங்கர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர பாஜக தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். முன்னாள் நகர தலைவர் எம். சேகர் வரவேற்றார். வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தேசிய மொழிப் பிரிவு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து ,கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சோனியா, வழக்கறிஞர் பாஸ்கர், சமூக ஊடகப் பிரிவு ரவிச்சந்திரன், நகர நிர்வாகிகள் முத்து, பாண்டியன், தனுஷ், கலைச்செல்வன், ஸ்ரீதர், சுரேஷ், செல்வம், சேகர், பாலசுப்பிரமணி, கணேசன், தீனன் வேலு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *