Headlines

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா : விழாக்கோலம் பூண்ட மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா : விழாக்கோலம் பூண்ட மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலகலமாக நடைபெற்றது.
ராஜ கோபுரங்கள், அம்மன் சுவாமி தங்க விமானங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கோயிலின் மேல்தளத்தில் 11 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
தென்னகத்தின் ஆன்மீக அடையாளமாகும். இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.11-ம் தேதி மாலையிலிருந்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டன.

செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக்கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்குவிழா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று காலை 4 மணிமுதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. பின்பு 6 மணியளவில் கலசங்கள் புறப்பாடானது.

காலை 7.35 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

7.40 மணியளவில் தீபாராதனை நடைபெற்றது. 7.50 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு குடமுழுக்கும், காலை 8.00 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது.

இவ்விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், உயர்நீதிமன்ற நீதிபதிகள்,மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் அண்பன் கல்லாணை, முஸ்தாபா, விஜய் மகாலிங்கம், கார்த்திகேயன், தங்கபாண்டியன், கோபிசன்
சிறப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அரசு செயலாளர்கள் வீரராகவ ராவ், மதுசூதனன் ரெட்டி, பழநி, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவக்குமார், குன்றக்குடி அடிகளார்,
தருமை ஆதினம் உட்பட பல ஆதீனங்கள் பங்கேற்றனர்.

மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *