Headlines

கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

​கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைப்பிற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

​கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலங்கள், கோமுகி அணையை நோக்கி அணிவகுத்துச் சென்றன.

​இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹ்ஷனாஸ் தலைமையில் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

​ஊர்வலம் கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியான நான்குமுனை சந்திப்பைக் கடந்தபோது, எஸ்.பி. ஹ்ஷனாஸ் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, விநாயகர் சிலைகளை ஏற்றிச்சென்ற வாகனங்களை நிறுத்தி, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு விதிகளை மீறி, அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை போலீசார் மூலம் எஸ்.பி. ஹ்ஷனாஸ் அதிரடியாக பறிமுதல் செய்தார்.

​பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும், நான்குமுனை சந்திப்பு அருகே மசூதி அமைந்திருப்பதாலும், எவ்வித அசம்பாவிதமும் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த அதிரடி சோதனையை மாவட்ட எஸ்.பி. மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *