Headlines

கடலில் தவறி விழுந்து மீனவர்கள் பரிதாப பலி : சோகத்தில் மீனவ கிராமங்கள்

கடலில் தவறி விழுந்து மீனவர்கள் பரிதாப பலி : சோகத்தில் மீனவ கிராமங்கள்

​ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

​அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.

​இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *