தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வட்மாநில பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து சில்கட் டவுன் வரை செல்லும் நாகூன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஒன்பதாம் பிளாட்பாரத்திற்கு வந்தது.
சிறப்பு ரயில் என்பதால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ரயிலில் முண்டியடித்து சென்று ஏறினர்.
அப்போது ரயில் புறபட்டதால் ஓடும் ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணி திடீரென தவறி ரயிலின் அடித்தளத்தில் விழுந்தார்.
அப்போது பாதுக்காப்பு பணியில் இருந்து ரயில்வே காவலர் உடனடியாக செயல்பட்டு பயணியை காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பினார்.
துரிதமாக செயல்பட்டு வடமாநில பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
