Headlines

முதல்வர், அமைச்சர் குறித்து ஆபாச பேச்சு : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

முதல்வர், அமைச்சர் குறித்து ஆபாச பேச்சு : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல்குமாரை ஆபாசமாக பேசியதாக தவெகவினர் அளித்த புகாரில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கைதை சர்ச்சைக்குரிய வகையான செய்கையால் கிண்டல் செய்த முதல்வர் விஜய் மற்றும் ஸ்டாலினின் கைதிற்கான காரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமாரை கண்டித்து திமுக சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் ஆபாசமான கருத்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து தவெகவினர பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் சென்னையில் ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் தவெகவினர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *