திண்டுக்கல்லில் அனுமதியின்றி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று நீர் நிலையில் கரைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1231 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர்
அனுமதி கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும்.
ஆனால் இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை உள்ளது
இதற்கிடையே இந்து முன்னணி சார்பில் பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ் பி ஜெயக்குமார், நகர் டி எஸ் பி கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்
தொடர்ந்து விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற நபர்களிடமிருந்து விநாயகர் சிலையை காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று திண்டுக்கல் கோட்டை குளத்தில் கரைத்தனர்.
தடையை மீறி திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றதால் வத்தலகுண்டு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
தொடர்ந்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்
இதே போல திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தடையினை மீறி வைக்கப்பட்ட சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
