Headlines

இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்ட்கள் : 5 முனை போட்டி உறுதி

இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்ட்கள் : 5 முனை போட்டி உறுதி

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளனர். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் முன்னாள், இந்நாள் கூட்டணி கட்சிகளை எதிர்த்து களம் காண்கின்றன.

சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன்,

தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் கட்சியின் நிலைப்பாடு தொடரும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனக் குற்றம்சாட்டிய அவர் இடதுசாரிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டின்படி தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர்கள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் அறிமுகக் கூட்டத்தில் அறிவிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், அரசின் தவறுகளையும் குறைபாடுகளையும் மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இடதுசாரிகள் இணைந்து போட்டியிடும் இந்த அறிவிப்பால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களம் 5 முனை போட்டிக்கு தயாராகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *