Headlines

சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் குண்டுகள் முழக்கமின்றி Guard of Honour கௌரவ மரியாதையுடன் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். உடல் நலக்​குறை​வால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று கால​மா​னார்.

மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

பல்​லா​யிரம் பட்​டிமன்​றங்​கள் மூலம் மக்​களை சிரிக்​க​வும், சிந்​திக்​க​வும் வைத்​தார். தொலைக்​காட்​சிகள் மட்​டும் பிரபல​மாக இருந்த காலத்​தில் தீபாவளி, பொங்​கல் உள்​ளிட்ட பண்​டிகை நாட்​களில் அவரது பட்​டிமன்​றம் இல்​லாமல் நிகழ்ச்​சிகள் இருக்​காது. அந்​தளவுக்கு பட்​டமன்ற நடு​வர்​களில் புகழின் உச்​சத்​தில் இருந்​தவர். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டை பெரு​மைப்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்​டு தமிழக அரசின் கலை​மாமணி விருதும், 2021-ம் ஆண்டு மத்​திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை
அடுத்து, மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் இன்று துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *