Headlines

கரும்பு லாரிகளை கண்டதும் குழந்தையாகும் யானைகள் : ஓட்டுநர்கள் வெளியிட்ட வீடியோ

கரும்பு லாரிகளை கண்டதும் குழந்தையாகும் யானைகள் : ஓட்டுநர்கள் வெளியிட்ட வீடியோ

கர்நாடகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள், ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் கரும்பு ஆலைக்கு செல்கின்றன. அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக செல்லும் கரும்பு லாரிகளை யானைகள் வழிமறித்து லாரியில் இருந்து கரும்புகளை பறித்து சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கர்நடாகத்தில் இருந்து ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த கரும்பு லாரியை பார்த்தும் அதை நோக்கி ஓடி வந்தது. அப்போது லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டார். அப்போது, யானையிடம் நாளைக்கு உனக்கு பிறந்த நாளு, ஒரு கத்தை கரும்பை எடுத்துக்கோ எனக்கூறி யானை கரும்பை எடுக்கும் வரை காத்திருந்தார். யானை கரும்பை எடுத்துவுடன் லாரி புறப்பட்டது.

அதைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக, மற்றொரு யானை காரப்பள்ளம் சாலையின் நடுவே நின்று கரும்புகளை ருசி பார்த்தது. அப்போது, சாலையின் இருபுறுமும் நின்ற வாகன ஓட்டிகள் யானை விரட்ட ஹாரன் அடித்து தொந்தரவு செய்தனர். அங்கிருந்த இளைஞர், யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் இன்னும் நாலு பீஸ் கரும்பு தான் இருக்கிறது. சாப்பிட்டவுடன் தானாக காட்டுக்குள் சென்றுவிடும் என வாகன ஓட்டிகளிடம் யானைக்காக கெஞ்சும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விநாயகர் வடிவில் யானை பார்க்கும் வானக ஓட்டிகள் யானைக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு மற்ற வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *