சர்தார் 2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யா தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
பக்தர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகின்ற 10 ம் தேதி வெளியாக உள்ள சர்தார் 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி, அந்த படத்தில் நடித்த கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகை ஆசிகா ஆகியோர் நேற்று திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை, சண்முகர், பெருமாள், சத்ருசம்ஹாரமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி உள்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.
அதன்பிறகு வெளியே வந்த நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை நோக்கி பக்தர்கள் உற்சாகமாக கையசைத்தனர். பதிலுக்கு நடிகர்களும் அவர்களை நோக்கி கை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.
