காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பேரில் உத்தரகாண்ட் மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்த்தாக கூறியும்,அதை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை எரித்தும் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக,ஆர்எஸ்எஸ் அமைப்பு தூண்டுதலின் பேரில் உத்தரகாண்ட மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, அதை கண்டித்து மாவட்ட தலைவர் நரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர் .

இதனை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை எரித்து 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் வாளியில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
