Headlines

ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் : ராக்கி அணிவித்த போலீசார்

ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் : ராக்கி அணிவித்த போலீசார்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழ்  காவல்துறையினர்  இணை காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார்  தலைமையில்   சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தினை இயக்கி வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி , உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் உயிர் முக்கியம் ஆகவே நீங்கள் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் என ராக்கி கட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் : ராக்கி அணிவித்த போலீசார்

அப்போது சில இருசக்கர வாகனங்களில் பதிவு எண் இல்லாததால் காவல்துறையினர் அந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் விதித்தனர்.

இதே போல் மாவட்டத்தில் உள்ள எல்லா காவல்நிலையங்களிலும் ராக்கி கட்டி தலைக்கவசம் அணிய வேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *