கோவையில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 40 பேர் தற்பொழுது பத்திரமாக உள்ளது அவர்கள் அனுப்பிய வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
ஐடியல் நேபாள் ட்ரக்ஸ் அண்ட் டூர்ஸ் மூலம் கோவையிலிருந்து கடந்த 18ம் தேதி 40 பேர் அடங்கிக் குழுவினர் கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர்
நேபாளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்தக் குழுவில் உள்ள சுவாமிநாதன் என்பவர் அனைவரும் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் அவர்,ஆகஸ்ட் 18ம் தேதி கோவையில் இருந்து 40 பேர் கைலாய யாத்திரை சென்றிருந்தோம். ஐடியல் நேபாள் ட்ரக்ஸ் அண்ட் ரூர்ஸ் மூலம் சென்றிருந்தோம்.
நேபாள் சம்பவம் நடந்த போது கைலாச நாதரிடம் இருந்தோம் சம்பவம் நடந்தது அன்று மதியம் தான் எங்களுக்கு தெரிய வந்தது
எங்களுக்கு பாதிப்பும் இல்லை தற்போது காட்மாண்டுவில் உள்ளோம் 40 பேரும் நலமாக இருக்கிறோம்.
தமிழக அரசும் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார்கள் எந்த உதவிகள் வேண்டுமானாலும் கேட்க சொல்லி இருக்கிறார்கள்
எங்களை இந்த அளவுக்கு விசாரித்ததற்கு தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.
