Headlines

ரீல்ஸ் மோகம் : சீண்டிய இளைஞர்களை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

ரீல்ஸ் மோகம் : சீண்டிய இளைஞர்களை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர் கிராமத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானையை, இளைஞர்கள் சிலர் அருகில் சென்று சீண்டியபடி வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென இளைஞர்களை நோக்கி வந்து ஆக்ரோஷமாக விரட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அங்கிருந்து அலறியபடி ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யானையிடம் சிக்காமல் அவர்கள் உயிர் தப்பினர்.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை சீண்டி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *