Headlines

புதிய உலக அழகியாக மகுடம் சூடிய ஜோஹெய்ரி மோலா

புதிய உலக அழகியாக மகுடம் சூடிய ஜோஹெய்ரி மோலா

உலக அழகி 2026 பட்டத்தை டோமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹைரி மோலா வென்றார்.

73-வது உலக அழகிப் போட்டி வியட்நாமில் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 110 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டி, வியட்நாமின் நா டிராங் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘தோ தியேட்டர்’ அரங்கில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்
டொமினிக் குடியரசை சேர்ந்த ஜோஹைரி மோலா உலக அழகியாக தேர்வு செய்யப்படார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் இடத்தையும், மலேசியாவின் தனுஷியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
கடந்த ஆண்டின் வெற்றியாளரான தாய்லாந்தின் ஓபல் சுசாடா ஜோஹைரி மோலாவுக்கு மகுடத்தை சூட்டினார்.

மேலும் உகாண்டா நாட்டு அழகி முஹோசா டிரிவியா எல் மேடையில் அணிந்து வந்த “தி லேயர்ஸ் ஆப் லைப்” என்ற கவுன் வகை ஆடை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா இந்த உடையை வடிவமைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *