Headlines

மாமூல் கேட்ட தவெக நபர் : பிச்சையெடுத்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

மாமூல் கேட்ட தவெக நபர் : பிச்சையெடுத்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்ககங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சுரேஷ். இவர் தனது சொந்த டிரஸ்டான ஹீரா பெண் மோடி அறக்கட்டளை சார்பாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள காக்கங்கரை குளத்தை தூர்வாரி வருவதாக கூறப்படுகிறது.

இந்த குளத்தால் சேமிக்கப்படும் தண்ணீர் காக்கங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்கள் பயன் பெறும். இந்த குளத்தை தூர் வாருவதை அறிந்த அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த
விஜயகுமார் என்பவர், குளத்தை தூர் வர எம்எல்ஏவுக்கு மாமுல் தரவேண்டும். மாமுல் கொடுத்தால் மட்டுமே இந்த பணி உன்னால் செய்ய முடியும், இல்லா விடில் பணியை நிறுத்த வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் மாமுல் தர தன்னிடம் காசு இல்லாத காரணத்தால் நூதனமான முறையில் மொட்டை அடித்து நாமம் போட்டு கொண்டு திருவோடு ஏந்தி மாமுல் தர குளத்தின் அருகே அமர்ந்து பிச்சை எடுத்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சுரேஷ் குமார், தவெகவை சேர்ந்த விஜயகுமார் எம்எல்ஏவுக்கு மாமுல் தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க வேண்டும். மேலும் தற்போது பிச்சை எடுத்தாவது விஜயகுமார் கேட்ட மாமுலை கொடுத்து விடுவேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *