சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 100 நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வரும் நீர் மோர் பந்தலின் 100-வது நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி மாநகராட்சி எதிரில், கழனிவாசல், பர்மா காலனி மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், 100 நாட்களுக்கு முன்பு நீர் மோர் பந்தல்கள் தொடங்கப்பட்டன.
இந்த நீர் மோர் பந்தல்களை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஐயப்பன், காரைக்குடி நகரச் செயலாளர் குள. சொக்கு, சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகி காளிதாஸ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இணைந்து தினந்தோறும் பொதுமக்களுக்கு நீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், நீர் மோர் பந்தல் தொடங்கி 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர்.
கோடை வெயில் மற்றும் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தொடர்ந்து 100 நாட்களாக நீர் மோர் வழங்கிய நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
