பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்டது உலாந்தி வனச்சரகம்.
இங்கு யானைகள், காட்டு மாடுகள் புள்ளிமான், சிறுத்தை, புலி கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சேத்துமடை சோதனை சாவடி இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் மாலை நேரங்களில் புலிகள் குட்டியுடன் சாலை கடந்த செல்கின்றன.
இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் வனத்துறை வாகனத்தை தவிர பிற வாகனங்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
தினசரி தமிழக அரசு பஸ்,கேரளா அரசு பஸ் இப்பகுதி பொதுமக்களுக்காக தினசரி சென்று வருகிறது.
அடிக்கடி காட்டு யானைகள் சாலையை கடப்பது வாடிக்கையாக உள்ளது.
இதை அடுத்து டாப்ஸ்லிப் அம்புலி இல்லம் பரம்பிக்குளம் சாலை போன்ற பகுதிகளில் அடிக்கடி புலிகள் தென்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாப்சிலிப்பில் இருந்து பரம்பிக்குளம் வனத்துறை சோதனை சாவடி அருகே ஒற்றை புலி தென்பட்டது.
இந்நிலையில் தற்போது டாப்சிலிப் செல்லும் சாலையில் வனப்பகுதியில் தமிழக கேரளா எல்லை பகுதியில் இரண்டு புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
