Headlines

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2026–27 ஆம் ஆண்டிற்கான சம்பா சாகுபடிப் பணிகளுக்கும், காவிரி படுகைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான பாசன நீரை உரிய காலத்தில் வழங்குவதன் மூலம் விவசாயப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காவிரி படுகைப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளையும் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி எம் சி யாகவும், நீர் வரத்து வினாடிக்கு 10,857 கன அடியாகவும் உள்ள நிலையில் தண்ணீர் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர், மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உரிய முறையில் பாசன நீர் சென்றடைவதன் மூலம் நடப்பு ஆண்டிற்கான சம்பா சாகுபடி பணிகள் சிறப்பாக நடைபெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *