தமிழகத்தின் தாராபுரம்,மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு,புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிப்பை இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டது.
இதன்படி தமிழகத்தின் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ரெஜிநகர் , நந்திகிராம் தொகுதிகளுக்கும், அசாமின் நாகூன் தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகளும் பட்டியல் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகள் ஆகும்.
