பீகாரில் திருட்டு பயத்தில் தனது காரை, அதன் உரிமையாளர் இரண்டாவது மாடியில் நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதியதாக, எஸ்.யு.வி வகை கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
இதனிடையே அவர் சொந்த வேலையாக வெளிநாடு செல்ல உள்ளார்.
இதனால் கார் திருட்டு போய்விடும் என்ற பயத்தால், அவர் கிரேன் மூலம், அந்த காரை தனது இரண்டாவது மாடியில் ”பார்க்” செய்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
