Headlines

கே ஆர் பி அணையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள் : விவசாயிகள் வேதனை

கே ஆர் பி அணையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள் : விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 1600 மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏழு நாட்களாக மாவட்ட முழுவதும் ஆங்ககே உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு அரசால் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் கரைக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீயணைப்பு வீரர்களுடன் கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் கே ஆர் பி அணையில் கரைக்கப்பட்டது. கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் 50க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் யாவும் நீரில் கரையாமல் அப்படியே கரை ஒதுங்கி உள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீரால் மாசு ஏற்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் மாசு கலந்த நீர் ஆற்றில் வெளியேறி வரும் நிலையில் தற்போது இப்பகுதியில் நீரில் கரையாது இரசயானத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தென்பெண்ணை ஆற்றில் கரைக்கமுடியமால் கரை ஒதுங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் இந்த விநாயகர் சிலைகளை உடனடியாக பொது பணித்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரில் கரையாத விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *