காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் கடந்த சில தினங்களாக அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
தினம்தோறும் 100 டிகிரி மேல் வெப்பம் பதிவாகி பொதுமக்கள் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்டம் முழுவதும் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
திடீர் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.
இருப்பினும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
