கூமாபட்டி பேக்கரியில் ஜீஸ் தர தாமதமானதால் ஆத்தி்ரமடைந்த இளைஞர் பெட்ரொல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு நேற்று மதியம் வந்த இசக்கிபாண்டி (26) ஜூஸ் கேட்ட நிலையில் ஜுஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு சென்று விட்டதாக கூறிப்படுகிறது .
இந்த நிலையில் இரவு இசக்கிபாண்டி கடைக்கு வந்து மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து கடைக்குள் எறிந்ததால் பொருட்கள் தீ பற்றி எரிந்தது.
இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூமாபட்டி பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
