2030க்குள் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி தான் இலக்கு. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு 20% ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஆடை துறையில் ஏ ஐ பயன்பாட்டால் உற்பத்தி அதிகரிக்குமே தவிர வேலைவாய்ப்பை பாதிக்காது என என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி)
தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
திருப்பூரில் செப்டம்பர் 16ஆம் தேதி ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட திருப்பூர் பனியன் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் கூறுகையில்.
53 வது நிட் பேர் கண்காட்சி செப்டம்பர் 16,17,18 என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது அமைச்சர் அருண்ராஜ் துவக்கி வைக்கிறார். 10 நாடுகள் உடன் இந்திய அரசு வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகின் 66 சதவீத மக்கள் இந்த வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஒன்றாக இணைகின்றனர். மற்ற நாடுகளும் ஆட்டோ மொபைல் போன்ற பல்வேறு துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆடை துறை உற்பத்தியில் பெரும்பாலான நாடுகள் இல்லை. அவை பெரும்பாலும் இறக்குமதியை தான் சார்ந்துள்ளது. எனவே ஆடை துறைக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தான் ஆடை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் இந்தியா மூலப்பொருள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளோம். 2030 க்குள்
40 பில்லியன் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது தான் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் குறிக்கோள்.
பல்வேறு நாடுகளுடன் செய்யப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்கும். பிற நாடுகளிலும் ஆடைகளை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 20 சதவீதம் ஏற்றுமதி அதிகரிக்கும். 60 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. நிட்பேர் கண்காட்சிக்கு அமெரிக்கா , ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற வழக்கமான நாடுகள் தவிர்த்து புதிதாக கொரியா, ஆப்ரிக்கா, போலந்து போன்ற நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் வர உள்ளனர். உள்நாட்டில் பஞ்சு மற்றும் நூல் விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
நம் நாட்டில் இருந்து நூல் பெற்று வங்கதேசம் நமக்கே போட்டியாக உள்ளனர். அதனை தவிர்க்க ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். என தெரிவித்தார். ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் ஏஐ தொழில்நுட்பம் என்பது உற்பத்தியை அதிகரிக்குமே தவிர்த்து வேலை வாய்ப்பை பாதிக்காது எனவும் தெரிவித்தார்.
