Headlines

அரூர் : மழை வேண்டி அம்மனுக்கு களி, கருவாட்டுக் குழம்பு படையல்

அரூர் : மழை வேண்டி அம்மனுக்கு களி, கருவாட்டுக் குழம்பு படையல்

தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மேட்டு மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் மழை வேண்டி களி மற்றும் கருவாட்டுக் குழம்பு படையலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

அரூர் மேல் பாஷா பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோட்டில் உள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன், அங்காளம்மன் கோயில்களுக்கு வந்தனர். அங்கு களி, கருவாட்டுக் குழம்பு சமைத்து அம்மன்களுக்கு படையல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு படையல் செய்யப்பட்ட களி, கருவாட்டுக் குழம்பு அன்னதானமாக வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், இவ்வாறு களி, கருவாட்டுக் குழம்பு படையலிட்டு வழிபட்டால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால
மரபாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *