Headlines

குட்காவை பதுக்கி விற்றவர் கைது : 28.5 கிலோ பறிமுதல்

குட்காவை பதுக்கி விற்றவர் கைது : 28.5 கிலோ பறிமுதல்

சென்னை கண்ணகிநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 28.5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை கண்ணகிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழில்நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்ணகிநகர் ஆய்வாளர் முருகானந்தத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலை அடுத்து ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் எழில்நகர் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது எழில்நகர் 49 வது பிளாக் அருகில் சந்தேகத்திற்கிடமான கையில் கவருடன் நின்றிருந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த கவரை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அந்த நபரை கைது செய்து கையில் வைத்திருந்த மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் 20 கிலோ, எம்டிஎம் பாக்கு 5.5 கிலோ,விமல் பாக்கு 2.5 கிலோ மற்றும் V1 பாக்கு 500 கிராம் என சுமார் 28.5 கிலோ எடை கொண்ட குட்கா,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கண்ணகிநகர், எழில்நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (51), என்பதும்,ஏற்கனவே தர்மராஜ் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தர்மராஜ் மீது வழக்குப் பதிவு செய்த கண்ணகிநகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *