Headlines

வெடித்து சிதறிய சிலிண்டர்கள் : கோவையில் பரபரப்பு

வெடித்து சிதறிய சிலிண்டர்கள் : கோவையில் பரபரப்பு

கோவை நவ இந்தியா பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர கொட்டகைகளில் சமையல் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

கோவை மாநகர் நவ இந்தியா பகுதியில் 40க்கும் மேற்பட்ட தகர கொட்டைகள் அமைத்து வட மாநில தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அனைவரும் இன்று பணிக்கு சென்றிருந்த நிலையில் திடீரென ஒரு கொட்டகையில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்துள்ளது.

அதனால் அடுத்தடுத்து சுமார் 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்களும் வட மாநில தொழிலாளர்களும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலை அடுத்து சம்பவர் இடத்திற்கு விரைந்து பீளமேடு மற்றும் தெற்கு தீயணைப்புத் துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வெடிக்காமல் இருந்த சிலிண்டர்களை மீட்டு பத்திரப்படுத்தினர்.

இந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்களின் தகரக் கொட்டகைகள் அவர்களது உடமைகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *