பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பான பயிலரங்கம் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அந்த காலத்தில் நான்கு கோடி ரூபாய் தான் செலவாகியுள்ளது.
ஆனால் தற்போது மேட்டூர் அணையை திறந்து வைக்க முதலமைச்சர் விஜய், 5 கோடி ரூபாய் செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார்.
மிக காஸ்ட்லி முதலமைச்சராக அவர் உள்ளார்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில் காவிரி நீர் கடை மடைவரை சென்று சேருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமராவதற்கு ராகுல் காந்திக்கு தகுதி உள்ளதா? விஜய்க்கு தகுதி உள்ளதா? என்பது இரண்டாவது விஷயம்.
கூட்டணியில் உள்ள இவர்களுக்கு உள்ளாகவே யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது.
இவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள். என தெரிவித்தார்.
