கோவை: கடந்த இரண்டு மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்திருந்த இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு, தற்போது மீண்டும் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி, பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மத்திய அரசு, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் எரிவாயு முகவர்கள் இணைந்து, கமலாத்தாள் பாட்டிக்கு மாதந்தோறும் 3 சிலிண்டர்களை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று அவருக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த இட்லி பாட்டி கமலாத்தாள், தனக்கு மீண்டும் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர், BPCL நிறுவனம், எரிவாயு முகவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
