ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் மூன்று லூப் லைன்கள் எனப்படும் இணைப்பு லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த டீசல் ரயில் இன்ஜின் ஒன்று லூப் லைனில் இருந்து வெளியே வரும் போது, எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டு
விபத்துக்குள்ளானது.


தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தால் ரயில் பயணப் பாதையில் இரு மார்க்கத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
