ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு டவுன் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஆகாஷ் (27).
இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு போலீசார் ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து
தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் செல்போன் டவர் மீது ஏறி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
