Headlines

அவசர கதி வேண்டாம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : பெ.சண்முகம்

அவசர கதி வேண்டாம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : பெ.சண்முகம்

புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு புதிய இடம் குறித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தோடு அவர்கள் அறிவிக்கும் இடத்தை தேர்வு செய்வது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் போட்டியிடுவது குறித்து நாளை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து ஆலோசித்து முடிவு செய்து பின்னர் அறிவிப்பதாகவும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை வள்ளலார் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் பெ சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200 கற் கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக தற்போதுள்ள மாநில அரசு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தியும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு உடனடியாக நியமன ஆணையை வழங்க வலியுறுத்தியும் அதே போன்று நீண்ட காலமாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் சுத்தமான குடிநீரை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகர பேருந்து சேவையை அதிகப்படுத்த வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நோயாளிகளுக்கு ஏற்ப அதிகப்படுத்த வலியுறுத்தியும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை என அறிவித்து பேருந்துகளை குறைத்துள்ளதை அதிகப்படுத்த வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் , ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கி நடைபெற்று வருவதாகவும், அதில் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவித்த அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் குறைகளை கேட்டு அதனை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு இதுகுறித்து தெரிவிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

வடசென்னையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும், வடசென்னை சிறப்பு திட்டங்களுக்காக நிதி ஒடுக்க வேண்டும் அவைகளை நடைமுறைப்படுத்த மாநில அரசை வலியுறுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் வட சென்னையில் குடியிருப்பு பிரச்சனை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவும் நீண்ட காலமாக வசித்து வருபவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் வடசென்னையில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தான் நீடித்து வருவதாகவும் அதேபோன்று தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் குடியிருப்பவர்களுக்கு நியமன ஆணை வழங்குவதிலும் சிக்கல்கள் நீடித்து வருவதாகவும் ஆகவே குடியிருப்பு பிரச்சனைகளில் நிரந்தரமான ஒரு தீர்வை காண்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும்
தற்போதுள்ள அரசு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு அவசர அவசரமாக ஒரு அரசாணையை சட்டமன்றத்தில் இயற்றி உள்ளதாகவும், தற்போது உள்ள தலைமை செயலகம் மிகுந்த போக்குவரத்து இட நெரிசலில் இருக்கும் நிலையில் அந்த தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை எனவும், ஏற்கனவே செல்வி ஜெயலலிதா இதுகுறித்து நடவடிக்கை எடுத்தார் மற்றும் கலைஞர் கருணாநிதி புதிய தலைமை செயலகத்தை கட்டியும் அது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பதவியேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் , பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்து அவர்கள் கூறும் இடத்தில் ஒருமித்த கருத்தோடு அனைவரும் செல்லும் வகையில் சென்னை நகரத்திலேயே புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை எந்த பணியும் தூங்க கூடாது என தெரிவித்தார்.

நீதிபதி கோகுல்ராஜ் ஆணையம் வெளிவந்துள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவிற்கு காவல்துறை மதுவிலக்கு துறை வருவாய்த்துறை அதிகாரிகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளதாகவும், கள்ளச்சாராய விற்பனை பேர்வழிகளுக்கும் அதிகாரிகளுக்கு இருந்த கள்ளத்தொடர்பு காரணம்தான் இந்த உயிர் இழப்புக்கு காரணம் என்றும், இப்போதும் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுவதாகவும், போதை பொருள் விற்பனையும் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் இந்த போதை பொருட்களை கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை.

எனவே காவல்துறையினரின்ஒத்துழைப்பு அல்லது தெரியாமல் வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருள் வந்து செல்வது என்பது நம்ப தகுந்ததாக இல்லை எனவும் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்றது. அருணா ஜெகதீசன் ஆணையம் குறித்து இதுவரையும் கடந்த திமுக ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதுள்ள தவெக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது எடுப்பார்களா என தெரியவில்லை. ஆகவே கோகுல்ராஜ் ஆணைய அறிக்கையின்படி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான
அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பல தொடர் விடுமுறை விடுவதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துக்கு கட்டணங்களை உயர்த்தி விடுகின்றார்கள்
எனவும், இது மிகப்பெரிய கட்டண கொள்ளை. சுற்றுலாத்தளம் மற்றும் ஊர்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் இந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கடந்த ஆட்சியிலும் நடைபெற்றது தற்போது உள்ள ஆட்சியிலும் இதே நிலைதான் நீடித்து இருக்கிறது. இந்த நிலையில் பதிவு செய்த கட்டணத்தையே நிறுத்திவிட்டு அதிகமான புதிய கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றார்கள். அராஜகமான அடாவடித்தனமான நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுமுறை நாட்களில் கூடுதல்த பேருந்துகளை தமிழ்நாடு அரசே நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் இந்த பிரச்சனையை தமிழ்நாடு அரசு தான் சரி செய்ய முடியும் என தெரிவித்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் போட்டியிடுவதற்கு ஆதரவு குறித்து நாளை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *