Headlines

ஆளுநர்,அமித்ஷாவிற்கு எதிராக ஆதவ் அர்ஜூனா பேசுவாரா? : சு.வெங்கடேஷன்

ஆளுநர்,அமித்ஷாவிற்கு எதிராக ஆதவ் அர்ஜூனா பேசுவாரா? : சு.வெங்கடேஷன்

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு அனுமதி கொடுக்காத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவும், தமிழக அமைச்சர்களும் பேசுவார்களா?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசுவார்களா? என
சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடசன் எம்.பி, மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

குறிப்பாக கடந்த காலத்தில் நடந்த ஊழல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் நெஞ்சை நிமிர்த்தி பேச முடியுமா என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

ஊழலுக்கு எதிராக எல்லா காலங்களிலும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள்.
ஊழல் செய்தவர்கள் மீது தமிழக வெற்றிக் கழகம் அரசு உறுதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம்.

கடந்த காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளுக்கு அனுமதி கொடுக்காமல் ஆளுநர் தான் நிறுத்தி வைத்திருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு அனுமதி கொடுக்காத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவும், தமிழக அமைச்சர்களும் பேசுவார்களா?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசுவார்களா? பேச வேண்டும்.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக என்றைக்காவது பேசி உள்ளார்களா?

இடதுசாரி வேட்பாளர்கள் இரண்டு பேரும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலுக்காக தங்கள் வாழ்க்கையை முழுமையாக செலவிட்டவர்கள்.

ஊழலுக்கு எதிரான அரசியல் பக்கம் நிற்பதாக இருந்தால் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை தமிழக வெற்றி கழகம் எடுக்க வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிராக துணிந்து நிற்பதாக அர்த்தம்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக பேசிய ஆதாரத்தை வெளியிடுங்கள்.

ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால் இடதுசாரி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்க வேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *