Headlines

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை : துவக்கி வைத்த ஆட்சியர்

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை : துவக்கி வைத்த ஆட்சியர்

திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

கடந்த 92 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் திருப்பத்தூர் விற்பனை நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளியையொட்டி ரூ.14 லட்சத்திற்கு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.35 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்காக வட்டி இல்லா கடன் வசதியும் இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.கோ-ஆப்டெக்ஸில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ரகங்களின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், துணை மண்டல மேலாளர்கள், விற்பனை நிலைய மேலாளர் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *