Headlines

மதுபோதையில் மோதல் : இளைஞரை குத்தி கொன்ற 4 பேர் கைது.

மதுபோதையில் மோதல் : இளைஞரை குத்தி கொன்ற 4 பேர் கைது.

புதுச்சேரி
லாஸ்பேட்டை செயிண்ட் பால் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் மதன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.இவர் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த 21ம் தேதி இரவு 10 மணி அளவில் இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில் உள்ள பாருக்கு சென்று மது குடித்தார்.
அங்கு லாஸ்பேட்டையை சேர்ந்த மரியான்,
வினோத்,
மோகன்ராஜ்,ஆனந்த்ராஜ் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இரு ஆண்டுகளுக்கு முன் வீதியில் ஏற்பட்ட சண்டையில்
மதனுக்கும் மரியானுக்கும் மோதல் ஏற்பட்டது.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து அன்று மதனும் மரியானும்
மோதலை முடிவுக்கு கொண்டு வருவோம் என சமாதானம் பேசி,
இரு கோஷ்டிகளும் ஒன்றாக குடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில்
மதன் குழுவை சேர்ந்த
சரண்,ஜெகதீஷ் ஆகியோர் எதிரணியினரை
மரியாதை குறைவாக அழைத்துள்ளனர்.
இதனால் தகராறு மீண்டும் ஏற்பட தப்பி ஓடிய மதனை
மரியான்,வினோத்,
மோகன்ராஜ்,ஆனந்த்ராஜ் ஆகியோர் விரட்டி மது பாட்டில்களால்
குத்தி கொன்றனர்.

இதுகுறித்து தன்வந்தரி நகர் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி
மரியான் குழுவினரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *