கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்வா ,சபரி கிரி இருவரும் கடலூர் பெரியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர் இந்நிலையில் 21ஆம் தேதி ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சென்று விட்டு வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்
இந்நிலையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் முறையான விசாரணை இல்லை என்று இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது சம்பந்தமாக நெல்லிக்குப்பம் போலீசார் மாணவர்களை தேடி வந்த நிலையில் இன்று கடலூர் கிழக்கு ராமாபுரம் அருகே விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை சாலையோர மழைநீர் வடிகால் வாய்க்கால் அருகே 2 சடலங்கல் கிடப்பதாக அப்பகுதியினர் தகவல் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் தண்ணீரில் மூழ்கியிருந்த இரு இளைஞர்களின் சடலத்தை வீட்டு வெளியே எடுத்து வந்தனர்
இவர்கள் வந்த இருசக்கர வாகனமும் இதே தண்ணீரில் மூழ்கி கிடந்தது. அந்த இரு சக்கர வாகரத்தையும் வெளியே எடுத்து வந்தனர்.
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்களும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவர் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
